ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை: ராகுல்டிராவிட் பேட்டி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் அளித்த பேட்டி: ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஓய்வு இருப்பது அவசியம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வீரர்களை மதிக்க வேண்டும். டெஸ்ட். ஒரு நாள், டி20 என ஒவ்வொரு பார்மெட்டுக்கும் ஒவ்வொரு அணியை தயார் செய்வது எனது திட்டமில்லை. அனைத்து பார்மெட் கிரிக்கெட்டும் முக்கியமானதுதான். அடுத்து ஐசிசி தொடர் வர இருக்கும் நிலையில், அதற்காக தயார் செய்து கொள்வது அவசியமாகிறது. அணியை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை. வீரர்கள் பிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும், என்றார். …

The post ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை: ராகுல்டிராவிட் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: