வாக்காளர் சிறப்பு முகாம் 25, 26ம் தேதிக்கு மாற்றம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 18, 19ம் தேதிகளில் நடைபெற இருந்த வாக்காளர் சிறப்பு முகாம் வரும் 25, 26ம்தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவிருந்த வாக்காளர் சிறப்பு முகாம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியானது அக்டோபர் 27ம் தேதி தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதம் 9ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய கடந்த 4ம்தேதி(சனிக்கிழமை) மற்றும் 5ம்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, வரும் 18ம்தேதி(சனிக்கிழமை) மற்றும் 19ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, 13ம்தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறையாகவும், அதற்கு பதிலாக வரும் 18ம்தேதி அன்று பணி நாளாகவும் அறிவித்தது. இதனால் வரும் 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடக்கவிருந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வரும் 25ம்தேதி (சனிக்கிழமை) மற்றும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாக்காளர் சிறப்பு முகாம் 25, 26ம் தேதிக்கு மாற்றம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: