ஓபராய் குழும தலைவர் பிரித்வி மறைவு

புதுடெல்லி: இந்தியா முழுவதும் ஓட்டல்களை நடத்தும் ஓபராய் குழுமத்தின் தலைவர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் சர்வதேச சொகுசு பயண சந்தையான ஐஎல்டிஎம்.மின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் அமெரிக்காவின் ஓட்டல்ஸ் நாளிதழின் உலகின் சிறந்த பெருநிறுவன ஓட்டல் விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு வணிகத் துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ஓபராய் குழும தலைவர் பிரித்வி மறைவு appeared first on Dinakaran.

Related Stories: