சுற்றுலா பயணிகளை கவரும் பால்சம் மலர் அலங்காரம்

 

ஊட்டி, நவ.10: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டிக்கு நாள் தூறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல், பூங்கா ரோஜா, பூங்கா தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று கண்டு ரசித்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.

அங்குள்ள பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், வெளிநாடுகளில் காணப்படும் பல்வேறு மரங்கள் ஆகியவைகளை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி இது குறித்து ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டாம் சீசனக்காக ஊட்டி தாவரவியல பூங்கா கடந்த இரு மாதங்களுக்கு முன் தயார் செய்யப்பட்டது. தற்போது சீசன் முடிந்த நிலையில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் இன்றி காட்சியளிக்கின்றது.

மேலும் ஒரு சில இடங்களில் முதல் சீசனுக்கு பாத்திகள் தயார் செய்யப்பட்ட நிலையில் மலர் செடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதே சமயம் கண்ணாடி மாளிகையில் பால்சம் பெட்டூனியம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post சுற்றுலா பயணிகளை கவரும் பால்சம் மலர் அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: