தலைஞாயிறு பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஆய்வு

 

வேதாரண்யம்,நவ.6: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் அறிவுறுத்தலின்படி தலைஞாயிறு பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்த்தல் நீக்கம், திருத்தம், சிறப்பு முகாம்களை மாநில திமுக பொதுக்குழு உறுப்பினரும், தலைஞாயிறு பேரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பு பார்வையாளருமான பழனியப்பன், பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் பார்வையிட்டார்.அப்போது முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பேரூர் துணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுந்தர பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி ஹைதர்அலி, வீரக்குமார், ஒன்றிய பிரதிநிதி கணபதி, இளைஞர் அணி விக்கி, பேரூர் பொருளாளர் அன்பழகன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

The post தலைஞாயிறு பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: