சுங்கான்கடை புனித சவேரியார் கல்லூரியில் கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா

திங்கள்சந்தை, நவ. 4: சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியின் கவின் நுண்கலை மன்ற ஆண்டுவிழா நடந்தது. விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். பரிசளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு குழிதுறை கத்தோலிக்க மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி அகஸ்டின் தலைமை வகித்தார். பேராசிரியை சிமிமோள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழ்மொழி சிறப்பு குறித்தும் அனைவருக்கும் படிப்பு முதன்மையாக இருக்கவேண்டும் என்றும் எடுத்து கூறினார். தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் மாணவரும் மலையாள திரை நட்சத்திரமுமாகிய நலீப் ஜீயோ சிறப்புரையாற்றினார்.

கல்லூரி தாளாளர் அருட்பணி மரியவில்லியம், கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், பொருளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இடையிடையே கவின் நுண்கலை மன்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேராசிரியர் ஜெய சுரேண்ராஜ் நன்றி கூறினார். இன்று (4ம் தேதி) 21வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லூரி கலையரங்கத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் விழாவிற்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமை வகிக்கிறார். ஐஎஸ்ஆர்ஓ இயக்குனரும் விஞ்ஞானியுமான ஆசீர் பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்குகிறார்.

The post சுங்கான்கடை புனித சவேரியார் கல்லூரியில் கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: