தேனி மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மரணம்

தேனி, நவ. 1: தேனி மாவட்ட குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையின்போது உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் சரவண தெய்வேந்திரன்(46). இவர் தேனி மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

கை, கால், மூட்டு வலியாலும், வைட்டமின் குறைபாட்டாலும் அவதிப்பட்டவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது நேற்று இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டது.

The post தேனி மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: