சீட் கிடைக்காததால் பாஜவில் சேர்ந்த காங். எம்எல்ஏ

அம்பிகாபூர்: சட்டீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தின் சாம்ரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சிந்தாமணி மகராஜ். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த தொகுதியில் விஜய் பைக்ராவை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சிந்தாமணி மகராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்துள்ளார். பாஜ மாநில பொறுப்பாளர் ஓம் மாதூர் உள்ளிட்டோர் முன்னிலையில் மகராஜ் பாஜவில் இணைந்தார். இவர் ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு பாஜவில் இருந்து காங்கிரசில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜவிற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சீட் கிடைக்காததால் பாஜவில் சேர்ந்த காங். எம்எல்ஏ appeared first on Dinakaran.

Related Stories: