கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஷிரத் தொகுதி எம்பி ஹஜி எஸ்கே நூருல் இஸ்லாம்(61) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வடக்கு 24பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.