சுற்றுலா துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்

 

ஊட்டி, அக்.31: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) நீலகிரி மாவட்ட குழுவில் இணைக்கப்பட்ட சங்கங்களின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் ஊட்டியில் நடந்தது. ஊட்டியில் உள்ள மாவட்ட குழு அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன், மாநில செயலாளர் ரங்கராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கும் நீலகிரியில் சுற்றுலா துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு டேன்டீக்கு சொந்தமான ேதயிைலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் போக்கினை கைவிட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இன்ட்கோ கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்.

The post சுற்றுலா துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: