அண்ணாமலை சொல்கிறார் ஆளுநர் கேட்கிறார்: காதர் மொய்தீன் குற்றச்சாட்டு


அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். வரும் தேர்தலிலும் சிறப்பாக செயல்பட்டு திமுகவை வெற்றியடைய செய்வோம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கவர்னர் கையெழுத்திடவில்லை. கவர்னர் கையெழுத்திட மாட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி கூறுகிறார்.

தமிழகத்திற்கு அண்ணாமலை கவர்னரா அல்லது ஆர்.என்.ரவி கவர்னரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்ணாமலை சொல்வதைக் கேட்டுத்தான் ஆளுநர் செயல்படுகிற நிலைமை உள்ளது. ஆளுநர் பதவி என்பது இரட்டை ஆட்சிக்கு உட்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். இதனால் அவர் கூடிய விரைவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரை மாற்றும் இடத்திற்கு இந்தியா கூட்டணி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை சொல்கிறார் ஆளுநர் கேட்கிறார்: காதர் மொய்தீன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: