கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. முதல் போக சாகுபடி நிறைவடைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். அதிக மழையினால் விளைந்த நெற்கதிர்கள் வயல்வெளிகளில் சாயத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூங்கோதையிடம் ஆய்வு மேற்கொள்ள கேட்டுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் கம்பம் கே. கே.பட்டி ரோடு பகுதியில் உள்ள வயல்வெளிகளில் கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூங்கோதை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின் விவசாயிகள் இடம் பேசிய வேளாண் அதிகாரிகள், நீர் தேங்காமல் வயல்வெளிகளை உடனடியாக வடித்து வைக்கும்படி அறிவுரை வழங்கி அறுவடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

The post கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: