பழங்குடியின மகளிர்களுக்கு சுயதொழில் பயிற்சி

 

பந்தலூர், அக்.25: பந்தலூர் அருகே கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் மகளிர்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. ஆல் தி சில்ரன் நீலகிரி சார்பில் பந்தலூர் கூவமூலா பழங்குடியினர் கிராம சமுதாய கூடத்தில் பழங்குடியினர் மகளிர் குழு பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், நிர்மான் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் பிரபாகர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில்,“மகளிர்களுக்கு சுயதொழில் கற்று கொள்வது சுயசார்பை உருவாக்கும். கற்றுக்கொள்ளும் தொழில் மூலம் வருவாய் பெருக்கி கொள்ள முடியும்.  தையல் தொழில் மூலம் எளிமையாக மாதந்திர வருவாய் பெறவும் அரசு மூலம் இலவச இயந்திரம் பெற்றும், இலவச சீருடை தைத்தும் வருவாய் ஈட்ட முடியும். அக்கறையோடு கற்று கொண்டு முன்னேற வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து மகளிர் தையல் பயிற்றுநர் சுலோச்சனா துணிகளில் எம்ராய்டரி செய்தல், தைத்த துணியில் அழகு வேலைபாடுகள் செய்தல், பூக்கள் – சின்னங்கள் வரைதல், கைவண்ண வேலைபாடுகள் குறித்து பயிற்சி அளித்தார். ஆர்வமுடன் செயல்படும் மகளிர்களுக்கு ஆல் தி சில்ரன் அமைப்பு மூலம் 6 மாத இலவச தையல் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். 20 பழங்குடியின பெண்கள் பயிற்சி பெற்றனர்.

The post பழங்குடியின மகளிர்களுக்கு சுயதொழில் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: