மகரநோன்பு திருவிழாவில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி

கமுதி, அக்.25: கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த வாரம் காப்புகட்டுடன் துவங்கியது. கோயிலின் உள்ளே கொலு வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் கொலுவை கண்டுகளித்து, சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.நேற்று முன்தினம் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடைசி நாளான நேற்று இரவு மகர நோன்பு திருவிழாவை முன்னிட்டு, முருகப் பெருமான் குதிரை வாகனத்தில், கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக மகரநோன்பு திடல் வந்து, அம்பு எய்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் 500க்கும்மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post மகரநோன்பு திருவிழாவில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: