மாநில தடகளப் போட்டிகளில் பாலக்காடு மாணவர்கள் சாதனை

 

பாலக்காடு, அக்.23: கேரளாவில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் பாலக்காடு மாவட்டம் மாணவர்கள் 28 தங்கம், 27 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கிய பதக்கங்கள் மொத்தம் 266 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். 2வது இடத்தில் மலப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்கள் 168 புள்ளிகள் பெற்றனர். 98 புள்ளிகள் பெற்ற கோழிக்கோடு மாவட்ட மாணவர்கள் 3வது இடத்தை பெற்றனர்.

பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்க்காடு தாலுகா குமரம்புத்தூர் கல்லடி மேல்நிலைப்பள்ளி 3வது இடத்தையும், பரளி மேல்நிலைப்பள்ளி 4வது இடத்தையும், சித்தூர் மேல்நிலைப்பள்ளி 7வது இடத்தையும் பிடித்தது. கடந்தாண்டும் 32 தங்கம், 21 வெள்ளி, 18 வெங்கலம் ஆகியவை உட்பட 269 புள்ளிகள் பெற்று பாலக்காடு மாணவர்கள் வெற்றிவாகைச் சூடியிருந்தனர். இந்தாண்டும் 266 புள்ளிகள் பெற்று மாணவர்கள் பாலக்காடு மாவட்டத்திற்கு பெருமைத்தேடி தந்துள்ளனர்.

The post மாநில தடகளப் போட்டிகளில் பாலக்காடு மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: