ரோட்டரி சங்கம் சார்பில் புற்றுநோய் நோயாளிக்கு நிதி உதவி

 

கூடலூர், அக்.23: கூடலூர் வேலி ரோட்டரி அலுவலகத்தில் புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு சங்கத் தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. வேலி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பங்களிப்பின் மூலமாக தி மேக்ஸ் பவுண்டேசன் தெற்காசிய பிரதிநிதி விஜயலட்சுமி வெங்கடேஷ் வசம் ரூ.41 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஜயலட்சுமி வெங்கடேஷ் பேசுகையில், ‘ஆரம்ப காலத்தில் கண்டறியப்படும் புற்று நோய்கள் முழுவதுமாக குணப்படுத்தக்கூடியது. முதலில் பாதிக்கப்பட்டவர்கள் பயத்திலிருந்து வெளிவர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பிரண்ட்ஸ் ஆப் மேக்ஸ் தன்னார்வலரும் புற்றுநோயிலிருந்து குணமடைந்த கார்த்திகேயன் பேசும்போது மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாதுகாப்பாக மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது நோயிலிருந்து எளிதில் மீண்டு வரலாம் என்றார். சாய் பார் கேன்சர் என்ற வாகன பேரணி மூலம் பெறப்படும் நன்கொடையானது ஏழை எளிய புற்றுநோயாளிகள் மருந்து வாங்குவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் 100% செலவிடப்படுகிறது என தெரிவித்தார். நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க உறுப்பினர் உதய பிரகாஷ் நன்றி கூறினார்.

The post ரோட்டரி சங்கம் சார்பில் புற்றுநோய் நோயாளிக்கு நிதி உதவி appeared first on Dinakaran.

Related Stories: