இலங்கை தமிழர்களை கனடா அனுப்ப முயற்சி தலைமறைவு வாலிபரை கைது செய்தது என்ஐஏ

உத்தமபாளையம்: ராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது இம்ரான்கான் (35). இவரதுஅக்கா வீடு தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு உத்தமபாளையம் வந்த முகமது இம்ரான்கான், ஓட்டலில் வேலை செய்துள்ளார். அந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

2021ல் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் 38 பேர் கனடாவிற்கு திருட்டுப் படகு மூலம் கடல் மார்க்கமாக செல்ல முயன்றனர். அப்போது கடற்படை போலீசார் இவர்களை பிடித்தனர். மங்களூர் கடற்படை போலீசார் நடத்திய விசாரணையில், முகமது இம்ரான்கான்தான் இவர்களை திருட்டுப் படகு மூலம் அனுப்ப முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து, என்ஐஏ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது இம்ரான்கானை தேடி வந்தனர். உத்தமபாளையத்தில் அவர் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post இலங்கை தமிழர்களை கனடா அனுப்ப முயற்சி தலைமறைவு வாலிபரை கைது செய்தது என்ஐஏ appeared first on Dinakaran.

Related Stories: