பாஜவுடன் நட்பா? நிதிஷ்குமார் கோபம்

பாட்னா: பீகார் மோத்திஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று பேசினார். அப்போது பா.ஜ தலைவர்களுடனான தனிப்பட்ட நட்பு நீடிப்பதாக தெரிவித்தார். இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் விலகப்போவதாக செய்திகள் வெளியானது.

இதுபற்றி நேற்று நிதிஷ்குமார் கூறுகையில்,’மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எனது உரை பற்றிய செய்திகளைப் படித்தபோது நான் வேதனையடைந்தேன். நான் எப்போதும் சொல்வது போல், ஊடகங்கள் பாஜவால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் தான் பா.ஜவுடன் நட்பு என்று தெரிவித்து உள்ளனர். நான் தனிப்பட்ட நட்பு குறித்து பேசியதை குழப்பி எழுதியுள்ளனர்’என்று தெரிவித்தார்.

The post பாஜவுடன் நட்பா? நிதிஷ்குமார் கோபம் appeared first on Dinakaran.

Related Stories: