கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம்!

சண்டிகர்: சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் காவலரால் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கங்கனா கன்னத்தில் பளார் விட்ட குல்விந்தர் கவுர் என்ற காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கங்கனா வலியுறுத்தினார்.

அடிக்கடி சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு பெயர் பெற்ற கங்கனா ரனாவத், சமீபத்தில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பலர் அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டார். கங்கனாவின் கருத்துக்களால் அவர் தனிப்பட்ட முறையில் புண்படுத்தப்பட்டதால் குல்விந்தர் கவுர் கங்கனாவை கணத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். “விவசாயிகள் 100, 200 ரூபாய்க்காக போராட்டத்தில் உட்காருகிறார்கள் என கங்கனா பேசியிருந்தார். என் அம்மாவும் அந்தப் போராட்டத்தில் இருந்தார்” என கங்கனாவை கன்னத்தில் அறைந்ததால் சஸ்பெண்ட் ஆன CISF காவலர் கூறியுள்ளார்.

The post கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: