அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மோடிக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி

டெல்லி: ஒன்றிய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் கே.சி.தியாகி வலியுறுத்தியுள்ளார். பிரச்சாரத்தின்போது அக்னிபாத் திட்டத்துக்கு நிலவிய எதிர்ப்பை உணர்ந்ததால் அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்னிபாத் திட்டம்: பாஜக கூட்டணி கட்சிகள் நெருக்கடி
ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியின் மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி, அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தை கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிராக் பாஸ்வான் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மோடிக்கு கூட்டணி கட்சிகள், பல நிபந்தனைகளை விதித்து வருவதால் பாஜக அதிர்ச்சியில் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் அக்னிபாத் குப்பை தொட்டியில் வீசி எறியப்படும் என ராகுல் ஏற்கனவே பேசியிருந்தார். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டு காலம் ராணுவத்தில் பணி வழங்கப்படும் என்பதால் அதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. ராணுவப் பணியையே தற்காலிக வேலையாக மாற்றுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

The post அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மோடிக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி appeared first on Dinakaran.

Related Stories: