சாகுபுரம் தனியார் பள்ளியில் காண்போரை கவர்ந்த மழலையர் கொலு காட்சி

ஆறுமுகநேரி, அக். 21: சாகுபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மழலையர் குழந்தைகள் கொலுவாக அமர்ந்திருந்த நிகழ்ச்சி நடந்தது. ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவை சேர்ந்த எல்கேஜி, யூகேஜி மாணவ -மாணவியர் மதநல்லிணக்கம், மனிதநேயம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதக் கடவுள்கள், தேசிய தலைவர்கள், சாதனையாளர்கள், இசை கலைஞர்கள், விலங்குகள் போன்று தங்களை அலங்கரித்துக் கொண்டு கொலுவாக அமர்ந்திருந்தனர். இக்காட்சி காண்போரை கவர்ந்திழுத்தது. சாகுபுரம் டிசிடபிள்யு நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த வர்ஷா ஜெயின் கலந்து கொண்டு மழலையர் குழந்தைகள் கொலுவாக அமர்ந்திருந்த காட்சியை திறந்து வைத்தார். பள்ளியின் டிரஸ்டியும் டிசிடபிள்யு நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் னிவாசன், நந்தினி னிவாசன், பள்ளி ஆலோசகர் உஷாகணேஷ், முதல்வர் ஸ்டீபன் பாலாசீர், துணை முதல்வர் சுப்புரத்தினா, நிர்வாகி மதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இந்நிகழ்ச்சியில் திரளான பெற்றோர் கலந்து கொண்டு மழலையர் குழந்தைகள் கொலுவாக அமர்ந்திருந்த காட்சியை பார்த்து ரசித்தனர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post சாகுபுரம் தனியார் பள்ளியில் காண்போரை கவர்ந்த மழலையர் கொலு காட்சி appeared first on Dinakaran.

Related Stories: