நெசவாளர் பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி

பரமக்குடி, அக்.20: பரமக்குடி வட்டம், எமனேஸ்வரம் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நபார்டு உதவியுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் விஜிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்கள் நல அறக்கட்டளை சேர்மன் கல்யாணி வரவேற்றார். 15 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் 180 நெசவாளர் பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் அருண்குமார் பேசுகையில்:- நெசவாளர் பெண்களுக்கு கைத்தறி நிறுவனம் அமைக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கமாகும்.

கைத்தறி நெசவுத் துறையில் புதுமையான தொழில்நுட்பம், சந்தைபடுத்துதல், கை எம்பிராய்டரி பயிற்சி, ஆரி பயிற்சி மற்றும் புதிய வடிவமைப்பு தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு கிராமப்புற நெசவாளர் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இப்பயிற்சி வழங்கப்படுகிறது என கூறினார். பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இம்முகாமில் பயிற்சி பெற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தாக பயிற்சி பெற்ற பெண்கள் தெரிவித்தனர்.

The post நெசவாளர் பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: