சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வங்கக் கடலில் அட்டகாசம் செய்யும் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களைத்தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினர். அதில் சிங்களக் கடற்படையினரும் அங்கம் வகிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் தமிழக மீனவர்களை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செய்யாமல் தடுப்பது தான் இலங்கை அரசின் நோக்கம். இந்திய அரசு நினைத்தால் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்துக்கு ஒரு சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை இனியும் வேடிக்கை பார்க்காமல், அவர்கள் மீது பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.