ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பாலக்காட்டில் வரவேற்பு விழா

 

பாலக்காடு, அக். 18: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பாலக்காட்டில் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை பாலக்காடு லோக்சபா தொகுதி எம்பி வி.கே.ஸ்ரீகண்டன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், விளையாட்டு போட்டிகளில் வெற்றியடைந்த வீரர், வீரங்கனைகளுக்கு மாநில அரசு ஆட்சியினர் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்கவேண்டும். உரிய மரியாதை மாநில அரசு சார்பில் வழங்க வேண்டும்.

வீரர், வீரங்கனைகள் மாநில அரசுக்கு பெருமை தேடித்தந்தவர்கள், அவர்களை ஒருபோதும் உதாசீனப்படுத்தக்கூடாது என குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற முகமது அஜ்மல், ஸ்ரீசங்கர், முகமது அப்ஷல் ஆகியோருக்கு பொன்னாடை அணிந்து, கெளரவித்து எம்பி வி.கே.ஸ்ரீகண்டன் பாராட்டு தெரிவித்தார். இதில் மாவட்ட தலைவர் ஷரிதாஸ் தலைமை தாங்கினார். மேலும் பத்மஸ்ரீ சிவன் நம்பூதிரி, வக்கீல் நரேந்திரன், ஒளிபியன் பீரஜா ஸ்ரீதரன், நடிகை அனுமோள், பாலக்காடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கவுன்சில் உறுப்பினர்கள், தனியார் பெண்கள் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

The post ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பாலக்காட்டில் வரவேற்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: