இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, வழ.முகமது உசேன், புஷ்பராஜ், சீனி முகமது, அகமது, சலீம் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இஸ்ரேலின் அடாவடியை கண்டித்தும், பாலஸ்தீனர்களின் மண்ணைக் காக்கும் போராட்டத்தை ஆதரித்தும் கோஷம் எழுப்பினர்.

The post இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: