வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை சாதிபிரச்னையாக பார்க்கக்கூடாது; சமூக நீதி பிரச்சனையாக பார்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நடப்பு கூட்ட தொடரிலேயே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி வன்னியர் உள்இடஒதுக்கீடு குறித்த தரவுகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை சாதிபிரச்னையாக பார்க்கக்கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் இதை சமூக நீதி பிரச்சனையாக பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்வி பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் வடமாவட்டங்கள் பின்தங்கி இருப்பதாகவும் அதனால் அதை கருத்தில் கொண்டு உள் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அன்புமணி சாதிவாரி மக்கள் தொகை ஆய்வை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். காவிரி படுகையிலுள்ள கபிணி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட நன்கு அணைகளும் தமிழ்நாட்டிலுள்ள மேட்டூர் அணையும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை சாதிபிரச்னையாக பார்க்கக்கூடாது; சமூக நீதி பிரச்சனையாக பார்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: