போக்குவரத்து விதிமீறல் அரசு பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: அரசு பஸ்சில் பயணித்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் வாரன்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என்றும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நோ பார்க்கிங், அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 22 பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்தில் சீட் பெல்ட் அணியாத டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. மேலும் இரண்டு பேருந்து ஓட்டுநர்களிடம் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுநர்களிடம் கொடுக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறி தடுப்புகளை அகற்றிவிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் நோக்கி சென்ற 5 அரசு பேருந்துகளுக்கு உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல்துறை சார்பில் தலா ரூ.500 வீதம் ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தின் உள்ளே செல்லாமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி சென்ற 4 அரசு மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

The post போக்குவரத்து விதிமீறல் அரசு பஸ்களுக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: