* பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறி பணம் கறந்தார்; நொய்டாவில் பதுங்கி இருந்த நைஜீரியர் கைது
சென்னை: தன்னை வெளிநாட்டு டாக்டர் என கூறி மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் பழகியதுடன் திருமணம் செய்வதாகவும், வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் பரிசு பொருளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று சுங்க துறை அதிகாரி போல பேசி இளம் பெண்ணிடம்ரூ.10.33 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நபரை போலீசார் நொய்டாவில் கைது செய்தனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் மேட்ரிமோனியில் திருமணத்துக்காக பதிவு செய்து இருந்தேன். எனது புகைப்படத்தை பார்த்து வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன்னை டாக்டர் என்று வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கும் ஒருவர் என்னை திருமணம் செய்ய விரும்பியதால், அதற்கு ஒப்புக்கொண்டேன். எனக்காக விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறினார். பிறகு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி என்று கூறி ஒருவர் பேசினார். அப்போது எனது பெயருக்கு விலை உயர்ந்த பொருட்கள் வந்துள்ளது. அந்த பரிசு பொருட்களுக்கு சுங்க வரி கட்ட வேண்டும் என் கூறினார். அதன்படி நான் சுங்கத்துறை அதிகாரி போல் பேசிய நபர் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளில்ரூ.10.33 லட்சம் வரை பணம் செலுத்தினேன். ஆனால், எனக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பரிசு பொருட்கள் கிடைக்கவில்லை. பிறகு எனக்கு பரிசு பொருட்கள் அனுப்பிய நபருக்கு போன் செய்த போது, அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
என்னை திருமணம் செய்வதாக நூதன முறையில் மோசடி செய்ததை நான் உணர்ந்தேன். எனவே, திருமணம் செய்வதாகரூ.10.33 லட்சம் பணம் மோசடி நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் இளம் பெண் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்கள் மற்றும் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, பீகார், மத்தியபிரதேசம், தெற்கு டெல்லி ஆகிய இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்தபோது, உத்தரபிரதேசம் மாநிலம் ெநாய்டாவில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே தனிப்படையினர் நொய்டாவிற்கு சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் விசாரணை நடத்திய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த தங்ககோட் சுவ்னிமேக ல்கெடினோபி(33) என்ற நபரை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், மேட்ரிமோனியில் வரம் தேடும் இளம் பெண்களை குறிவைத்து, ெவளிநாட்டில், டாக்டர், இன்ஜினியர், தொழிலதிபர் என கூறி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இளம் பெண்களை கவரும் வகையில் தொடர்பு கொள்ளும் வாட்ஸ் அப் எண்ணில் அழகான ஆண்களின் புகைப்படங்களை வைத்து, அது நான் தான் என இளம் பெண்களை நம்பவைத்து மோசடி செய்து அதன் மூலம் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறி, அவர்களை மற்றொரு நண்பரில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவது போல் மிரட்டி பல லட்சம் ரூபாய் பணம் பறித்தது தெரியவந்தது. சென்னையை போன்று மும்பை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள இளம் பெண்களை பலரை இது போல் ஏமாற்றி பணம் பறித்தும் உறுதியானது. அதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய பயன்படுத்திய 8 செல்போன்கள், ஒரு லேப்டாப், 3 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணிடம்ரூ.10 லட்சம் மோசடி appeared first on Dinakaran.