மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே பதிவில் அனுமதிக்கவேண்டும்: ஆ.ஹென்றி அறிக்கை

சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஆ.ஹென்றி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மனை பிரிவு, மனை உட்பிரிவு, கட்டிட அனுமதி, நில மறுவகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிகளை பெற பொதுமக்கள் ஆர்க்கிடெக்ட், பதிவுபெற்ற பொறியாளர்கள், உரிமம்பெற்ற கட்டிட அளவையர்கள் அணுகி, இவர்களின் அனுமதியுடன திட்ட வரைபடங்களை தயாரித்து ஒற்றைசாளர முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தனியாகவும், மாநகராட்சி வாரியாக தனியாகவும், நகராட்சி வாரியாக தனியாகவும், பேரூராட்சி வாரியாக தனியாகவும் மற்றும் ஊராட்சிக்கு என தனியாகவும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட திட்ட விதிகள் என மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விதி களையும், அதேபோன்று மாநிலம் முழுவதிலும் இருந்து அனுமதிக்கோரி விண்ணப்பிப்பதற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தொலை நோக்கு திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் சிஎம்டிஏ, டிடிசிபி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்தால் அந்தபதிவின் அடிப்படையில் திட்டம் தயாரித்து கையொப்பமிடும் அதிகாரத்தை பொறியாளர்களுக்கு வழங்கும் வகையில் வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

The post மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே பதிவில் அனுமதிக்கவேண்டும்: ஆ.ஹென்றி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: