சிறுமியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு அடி, உதை வாலிபர் கைது

வேலூர், அக்.8: காட்பாடி அருகே சிறுமியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.காட்பாடி ஜாப்ராபேட்டையை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கவுரிசங்கர்(23) இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக சிறுமியுடன் பழகி வந்த கவுரிசங்கர், இஸ்டாகிராம் மூலம் சிறுமியை பாலியல்ரீதியா கிண்டல் செய்துள்ளார்.

இதுபற்றி சிறுமி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதுதொடர்பாக அந்த வாலிபரை சிறுமியின் தந்தை தட்டிக்கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த கவுரிசங்கர், சிறுமியின் தந்தையை காட்பாடி அருகே வழிமறித்து தாக்கினாராம். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்பாடி போலீசார், கவுரிசங்கரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு அடி, உதை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: