இதனுடைய மாநகராட்சி 46வது மாமன்ற உறுப்பினர் கயல்விழி 46வது வார்டில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான சாலை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பலமுறை கூறியும் இதுவரை நடைபெறவில்லை என மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கூறினார். அப்போது, இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சி பொறியாளரிடம் பணி நடைபெற வேண்டுமென கூறி விட்டேன் என மேயர் பதில் அளித்தார்.
உடனே ஆவேசம், அடைந்த மாமன்ற உறுப்பினர் கயல்விழி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. தங்களிலேயே பதிலிலேயே தெரிகிறது என கூறியதும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி கூச்சலிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அதற்கு, பாஜ மாமன்ற உறுப்பினரும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ஒருவருக்கொருவர் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.
