ஒன்றிய பாஜ அமைச்சரை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர்கோரியில் போராடிய 4 விவசாயிகள் மற்றும் ஒரு ஊடகவியலாளரை கார் ஏற்றி படுகொலை செய்ய காரணமான ஒன்றிய அமைச்சர் அஷிஸ் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்திட வேண்டும்.

ஐக்கிய விவசாய சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டும். செங்கல்பட்டில் துவக்க காலத்தில் இருந்து செயல்படாமல் இருக்கும் எச்பிஎல் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் கலைச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் வி.ஏ.ஏழுமலை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் இரணியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

The post ஒன்றிய பாஜ அமைச்சரை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: