ஸ்பெயின் நைட் கிளப் தீ விபத்தில் 13 பேர் பலி


டேரிட்: ஸ்பெயின் தென்கிழக்கு பகுதி நகரம் முர்சியாவில் நேற்று முன் தினம் நைட் கிளப் ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. மளமளவென பரவிய தீயால் கிளப்பில் இருந்த ஆண்களும், பெண்களும் பதறியடித்து வெளியில் ஓடி வந்தனர். கிளப்பின் உட்புற கட்டமைப்புகள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்ததால் தீ வேகமாக பரவியது.விபத்து பற்றி அறிந்த முர்சியா தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர பல மணிநேரம் போராடினர். தீயில் சிக்கியவர்களை மீட்டதில் அவர்களில் 13 பேர் இறந்தது தெரிய வந்தது. தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post ஸ்பெயின் நைட் கிளப் தீ விபத்தில் 13 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: