ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 7 பேருக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை குடியாத்தத்தில் விடிய விடிய கண்காணிப்பு

குடியாத்தம்: குடியாத்தம் நகரில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 7 டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். குடியாத்தம் (பொறுப்பு) டிஎஸ்பி இருதயராஜ் உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை குடியாத்தம் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை புதிய பஸ் நிலையத்திற்குள் நின்று இருந்த ஆட்டோக்களை சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது, அனுமதியின்றி பஸ் நிலையத்திற்குள் ஆட்டோ நிறுத்தியது, உரிமம் இன்றி ஆட்டோ இயக்கியது என 7 டிரைவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.7,000 அபராதம் விதித்தனர். மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர். குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து முதல் நிலை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 7 பேருக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை குடியாத்தத்தில் விடிய விடிய கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: