ஆற்றில் கார் மூழ்கி 2 டாக்டர்கள் பலி

 

பாலக்காடு,அக்.2: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகின்ற 5 டாக்டர்கள் எர்ணாகுளத்திலிருந்து கொடுங்கல்லூர் நோக்கி காரில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணியளவில் வந்துள்ளனர். அப்போது சாலையில் எல்லை விட்டு கார் நிலைதடுமாறி எர்ணாகுளம் அருகே கருவாத்துரத்து ஆற்றினுள் பாய்ந்து மூழ்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர். உடனடியாக ஆற்றில் இறங்கி மூவரை காப்பாற்றியுள்ளனர்.

காருக்குள் சிக்கிய ஆத்வ்யூ, அஜ்மல் ஆகிய இரண்டு டாக்டர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த எர்ணாகுளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு டாக்டர்களின் உடல்களை மீட்டு எர்ணாகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவரம் குறித்து எர்ணாகுளம் வடக்கு பரவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆற்றில் கார் மூழ்கி 2 டாக்டர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: