கூடலூர், செப்.30: அசாம் மாநிலம் கெளகாத்தியில் நடைபெறும் தேசிய சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் தேசிய தலைவர் விஜய கோபால சக்கரவர்த்தி தலைமையில், துணை தலைவர் டெபாசிட் பால் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக பொதுச்செயலாளர் சளிவயல் ஷாஜி, தேசிய செயற்குழு உறுப்பினர் ஆரூட்டு பாறை மனோகரன், கேவி சாஜி உள்ளிட்டோரும் அசாம், மிசோரம், வெஸ்ட் பெங்கால், அருணாச்சல் பிரதேஷ், ஹிமாச்சல் பிரதேஷ் போன்ற மாநிலங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் சிறு தேயிலை விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவாதித்து வருகின்ற மாதத்தில் இது தொடர்பாக பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதென்றும், அகில இந்திய அளவில் சிறு தேயிலை விவசாயிகளின் போராட்டத்தை டெல்லியில் நடத்துவது என்றும், அடுத்த தேசிய அளவிலான கூட்டத்தை கூடலூர் பகுதியில் நடத்தவும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒரு கிலோ தேயிலை தூளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 150க்கு குறையாமல் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தமிழகம் சார்பில் கூடலூரில் இருந்து கலந்து கொண்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
The post தேயிலைத்தூள் கிலோ ரூ.150க்கு குறையாமல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.