கோத்தகிரி பழங்குடியின விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி

 

கோத்தகிரி, செப்.30: கோத்தகிரியை சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிறு தானிய பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உள் மாநில அளவிலான சிறு தானிய பயிர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த கண்டுணர் சுற்றுலா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய சிறு தானிய பயிர்களான திணை, சாமை மற்றும் கேழ்வரகு முதலியவற்றை அங்கக முறை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் திணை, சாமை உள்ளிட்ட தானிய வகைகளின் மதிப்பு கூட்டுதல் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இதேபோல அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா மற்றும் அரக்கோடு பகுதியை சார்ந்த பழங்குடியின விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

The post கோத்தகிரி பழங்குடியின விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: