பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சரக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வடக்கு மெக்சிகோவிற்கு சென்று அங்கிருந்து அமெரிக்க எல்லையை தாண்டி டெக்ஸாஸ், அரிசோனா மற்றும் கலிபோர்னியாவுக்குள் நுழைந்து வந்தனர். இந்த சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்கும் விதமாக மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க அரசு ராணுவத்தை அனுப்பியுள்ளது.
அவர்கள் முள்வேலிகளை அமைத்து ஊடுருவலை தடுத்து வருகின்றனர். இதனால் மெக்சிகோ, டெக்ஸாஸ் எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அங்கு திடீரென பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஈகுல் பாஸ் பகுதியிலிருந்து தனது எக்ஸ் சமூக வலைத்தளம் மூலம் அதிகாரிகளுடன் நேரலையில் பேசிய மஸ்க் விவரங்களை செல்பி கேமரா மூலம் பதிவு செய்தார்.
நேரலையில் போது டெக்ஸாஸ் எல்லையில் உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளையும் அவர் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார். அமெரிக்க குடியேற்ற சட்டங்களை மாற்றியமைக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும் மஸ்க் நேரலையில் ஒரு தொலைக்காட்சி செய்தியாளரை போல் விவரித்திருக்கிறார்.
The post மெக்சிகோ வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்: செய்தியாளர்கள் போல் நிலவரங்களை நேரலை செய்தார் மஸ்க் appeared first on Dinakaran.