இந்த நிலையில், உலக வர்த்தக அமைப்பின் வேளாண் குழு கூட்டத்தில் இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதால் தேவையில்லாமல் வர்த்தக தடங்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த தடையை நீக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் 134 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என்றும் 36 மில்லியன் டன் அரிசி இருப்பு வைக்கப்படும் என்றும் அமெரிக்கா தரவுகளை முன்வைத்தது.
ஆனால் உள்நாட்டில் நிலவும் சூழல் அடிப்படையில், 140 கோடி மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கள் நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று சில நாடுகள் கேட்டு கொண்டதன் பேரில் அந்நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.மேலும் முன்கூட்டியே தடை விலக்கிக் கொள்ளப்படும் பட்சத்தில் பதுக்கல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
The post இந்தியா அரிசி ஏற்றுமதி தடையை நீக்க அமெரிக்கா கோரிக்கை… உள்நாட்டில் நிலவும் சூழலின் பேரில் நடவடிக்கை என இந்தியா வாதம்!! appeared first on Dinakaran.