மிலாடி நபியை முன்னிட்டு ஊட்டியில் ஊர்வலம்

 

ஊட்டி, செப்.29: மிலாடி நபியை முன்னிட்டு ஊட்டியில் இஸ்லாமிய மக்களின் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபி தினமாக இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு ஊட்டியில் உள்ள பெரிய பள்ளி வாசலில் மிலாது விழா நடந்தது. விழாவில், முகமதிய மிலாது கமிட்டி தலைவர் முகம்மது சா, அயத்துல்லா இஸ்லாம் மதுரசா செயலாளர் உபைத்துல்லா, ஜமய்யா மசூதி தலைவடர் ஆதம் யுனஸ் சேட் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊட்டி எம்எல்ஏ மற்றும் நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, கமிஷ்னர் ஏகராஜ், ஆர்டிஓ மகாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கலந்து கொண்டு மிலாது விழா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் பெரிய பள்ளி வாசலில் துவங்கி, லோயர் பஜார், கமர்சியல் சாலை, மணிக்கூண்டு வழியாக ஏடிசி பகுதியை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர்வலங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடந்தன.

The post மிலாடி நபியை முன்னிட்டு ஊட்டியில் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: