அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்க துறை மீண்டும் சம்மன்

கொல்கத்தா: ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வரும் 3ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அபிஷேக் டிவிட்டரில் பதிவிடுகையில்,ஏற்கனவே, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த 12ம் தேதி டெல்லியில் நடந்த அதே தினத்தில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அதன்படி நான் ஆஜரானேன். தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தரக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து எனது தலைமையில் டெல்லியில் 3 ம் தேதி போராட்டம் நடக்கிறது. அதே தேதியில் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது பாஜ காவி கூட்டணியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

The post அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்க துறை மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: