ஹாரி பாட்டர் புகழ் நடிகரான சர் மைக்கேல் காம்பன் உடல்நலக் குறைவால் காலமானார்

லண்டன்: எட்டு “ஹாரி பாட்டர்” படங்களில் ஆறில் பேராசிரியர் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்த 82 வயதான சர் மைக்கேல் காம்பன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டப்ளினில் பிறந்த சர் மைக்கேல் காம்பன், தொலைக்காட்சி, திரைப்படம், நாடகம் மற்றும் வானொலி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். லண்டனில் உள்ள ராயல் நேஷனல் தியேட்டரின் உறுப்பினர்களில் ஒருவராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்துள்ளார்.

மைக்கேல் காம்பன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது; ” சர் மைக்கேல் காம்பனின் இழப்பை அறிவிப்பதில் நாங்கள் வருத்தத்திற்கு ஆளாகிறோம், அன்பான கணவர் மற்றும் தந்தை, மைக்கேல் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி அன்னே மற்றும் மகன் பெர்கஸுடன் அவரது படுக்கையில் மருத்துவமனையில் இறந்தார். இந்த வேதனையான நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் உங்கள் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி” என தெரிவித்துள்ளனர்.

The post ஹாரி பாட்டர் புகழ் நடிகரான சர் மைக்கேல் காம்பன் உடல்நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: