அந்த வரிசையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இலியானா ரோ என்ற ஆய்வாளர், உலகிலேயே முதல்முறையாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெண்ணிலா ஐஸ்க்ரீம் தயாரித்துள்ளார். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பாளி எத்திலீன், தெரப்த்தலிக் என்ற வேதிப் பொருளை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம் பார்ப்பதற்கு உண்மையான ஐஸ்க்ரீமை போன்று காட்சி அளிக்கிறது.
இந்த ஐஸ்க்ரீம் உட்கொள்வதற்கு ஏற்றதா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதில் சாதகமான முடிவு வரும் பட்சத்தில் சுவையான ஐஸ்க்ரீம் இதுவாக தான் இருக்கும் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யப்பட்ட ஐஸ்க்ரீம் உட்கொள்வதற்கு ஏற்றது தான் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஐஸ் க்ரீம் போன்ற பல உணவுகளும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் தயாரிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
The post உலகிலேயே முதல்முறையாக பிளாஸ்டிக் ஐஸ் க்ரீம் தயாரித்த பெண்.. சாப்பிட்டா எப்படி இருக்கும்? appeared first on Dinakaran.