மகளிர், தொண்டரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்து

ஊட்டி, செப்.28: நீலகிரி மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணிக்கு தலைவராக ஜெயகுமாரி, துணை தலைவராக வாணீஸ்வரி, அமைப்பாளராக கோமதி, துணை அமைப்பாளர்களாக பரிமளா, வெண்ணிலா, நாகமணி, மைமூனா, தமிழ்வாணி, பிரபாவதி, ராஜேஸ்வரி, சுசிலா, கௌரி, வள்ளி, சிவகாமி ஆகியோரும், மகளிர் தொண்டர் அணிக்கு தலைவராக சித்திரா தேவி, துணை தலைவராக அன்ன புவனேஸ்வரி, அமைப்பாளராக ஜெயந்தி, துணை அமைப்பாளர்களாக கீதா, சுசீலா, விசாலாட்சி, யசோதா, தனபாக்கியம், பிரேமா, கீர்த்தனா, ஜான்மின் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயலாளர் முபாரக்கை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசிலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், சிவானந்தராஜா, சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, தொரை, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, காந்தல் ரவி, ஆலன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், முரளிதரன் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

The post மகளிர், தொண்டரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: