ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி சார்பில் மருத்துவ முகாம்

 

ஊட்டி, செப்.27: ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி மூலிகை மருத்துவத்துறையும் மக்களுக்காக அறக்கட்டளை மற்றும் அகில இந்திய சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா சின்கோனா கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி துணை முதல்வர் அருண், அரசு மருத்துவர் பவேஷ் தொட்டபெட்டா ஊராட்சி செயலர் பிரசாந்த் மற்றும் சின்கோனா மருத்துவ தாவர வளர்ப்பகத்தின் மேலாளர் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் ஜெஎஸ்எஸ் மூலிகை மருத்துவத்துறை தலைவர் பிரியங்கா, மருத்துவர்கள் சண்முகம், சுனிதா, தீபலட்சுமி, ஸ்ரீகாந்த், ராஜா முகம்மது மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். இந்நிகழ்ச்சியில் மக்களுக்காக அறக்கட்டளை நிர்வாகிகள் ஜாம்பவான் ஜெரால்டு, ஆய்வக உதவியாளர்கள் சித்தராஜ், அருண்காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த முகாமில் சின்கோனா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

The post ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி சார்பில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: