கோத்தகிரி, செப்.27: கோத்தகிரியில், புயல் நிவாரண கூடத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி துவக்கி வைத்தனர். பின்னர் பயிற்சியில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொது சுகாதார, மருத்துவத்துறை அதிகாரிகள் தூய்மை பணியின் போது ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்தும், அவற்றில் இருந்து எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் எனவும் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செயல் அலுவலர்கள் மூலம் இந்த பயிற்சியில் தூய்மை பணியாளர்கள் தினமும் கையாளும் நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னதாக, கோத்தகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் அனைவரையும் வரவேற்றார். இந்த பயிற்சியில் 11 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
The post பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கோத்தகிரியில் ஒரு நாள் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.