சிஐடியு சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, செப்.27: டாஸ்மாக் மதுபான குடோனை மாவட்ட தலைநகரான ஊட்டிக்கு மாற்றக்கோரி சிஐடியு டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்கள் இறக்கு கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும். டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். ஏற்றுக்கூலியை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய வேண்டும். டாஸ்மாக் குடோனை மாவட்டத்தின் மையப்பகுதியான ஊட்டிக்கு மாற்ற வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை உடனே சீர்படுத்த வேண்டும்.

சுமைப்பணி தொழிலாளர்கள். உணவருந்தவும் உடை மாற்றவும் தனி அறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் குன்னூர் வண்டிசோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சுமைப்பணி தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகி விஜயகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

சிஐடியு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், சிஐடியு., மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், ஆட்டோ சங்க செயலாளர் யோகேஷ், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிக்குமார், சாலையோர வியாபாரிகள் பொருளாளர் ரபீக் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈஸ்வர், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ், பிலிப் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமணன் நன்றி கூறினார்.

The post சிஐடியு சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: