செங்கல்பட்டு இ-சேவை மையத்தில் கலைஞர் உரிமை தொகை மறுபதிவிற்கு குவிந்த பெண்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு இ-சேவை மையத்தில், கலைஞர் உரிமை தொகை மறுபதிவு செய்ய பெண்கள் குவிந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிருக்காக அறிவித்த கலைஞர் உரிமைத்தொகையினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா பிறந்த தினத்தன்று (செப்.15) துவங்கி வைத்தார். தமிழக முழுவதும் இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் மகளிர் பயனடைந்தனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதில் ஏராளமான பெண்களுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் வரவில்லையென்ற புகார் தமிழகம் முழுவதும் பரவலாக பொதுமக்களிடத்திலிருந்து வந்தது.

இதையடுத்து, அம்மனுக்களின் நிலை குறித்து பரிசீலனை செய்ய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டது. உரிமை தொகை கிடைக்காத காரணம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ளவும், மேலும் தகுதி வாய்ந்தவர்கள் மீண்டும் இ-சேவை மையங்களில் மறுப்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில், கலைஞர் உரிமை தொகை பெறுவதற்காக மறுபதிவு செய்ய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் ஒன்று திரண்ட காரணத்தினால், அங்கு கூட்டம் அலைமோதியது. மாவட்ட நிர்வாகம் இந்த நெரிசலை தவிர்க்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் முகாம் அமைக்க வேண்டுமென பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

The post செங்கல்பட்டு இ-சேவை மையத்தில் கலைஞர் உரிமை தொகை மறுபதிவிற்கு குவிந்த பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: