முனிச் நகரில் களைகட்டிய உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா: 34 லட்சம் பேர் ஒரே இடத்தில்கூடி உற்சாகம்

ஜெர்மனி: உலகின் மிக பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 34 லட்சம் பேர் இந்த பீர் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் கடந்த 1810ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பீர் திருவிழா அந்த நாடு பட்டத்து இளவரசர், பட்டத்து இளவரசியின் திருமணநாளை நினைவுகூரும் விழாவாகும்.

செப்டம்பர் மாதம் 2வது வாரம் தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை இந்த பீர் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பீர் திருவிழாவில் 60 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தற்போது 34 லட்சம் பேர் திரண்டு பீர் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

உலக பிரசித்திபெற்ற முனிச் பீர் திருவிழாவில் அமெரிக்கா, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள மது பிரியர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் திளைத்து வருகின்றனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் மெய்மறந்து உற்சாகத்தில் மிதந்தனர். கொரோனா காலமாக கடந்த 3 ஆண்டுகளாக கலைகாட்டாத பீர் திருவிழா மீண்டும் பழைய குதூகலத்தை எட்டியுள்ளது.

The post முனிச் நகரில் களைகட்டிய உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா: 34 லட்சம் பேர் ஒரே இடத்தில்கூடி உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: