இந்தியா கனடாவுக்கு இடையேயான மோதல்… அமெரிக்கா பகிர்ந்த தகவலின் அடிப்படையில் முடிவெடுத்ததா கனடா?

கனடா: காலீஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவிற்கு அமெரிக்கா உளவு தகவல் அளித்ததாக வெளியாகி இருக்கும் தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புவிசார் அரசியலில் தற்போது பூதாகரமாகி உள்ளது. கனடா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல். இந்தியாவால் காலீஸ்தானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசின் தலையீடு இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்திருந்தது இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையே மோதலுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், தனியார் ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பிறகு அது தொடர்பாக அமெரிக்கா உளவுத்துறை கனடாவிடம் தகவல்களை பகிர்ந்ததாகவும் அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கனடாவுகான அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக நிஜ்ஜார் கொலை செய்யப்படும் வரையில் அதில் இந்தியாவின் தலையீடு இருப்பது தொடர்பான எந்த ஆதாரம் மற்றும் தகவல் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை என்றும், இது குறித்து கனடா உளவுத்துறையே அறிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா கனடா அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில் 5 கண்கள் என்ற அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய 5 நாடுகளை கொண்ட உளவு அமைப்பு இந்தியாவிற்கு எதிரான கனடாவின் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post இந்தியா கனடாவுக்கு இடையேயான மோதல்… அமெரிக்கா பகிர்ந்த தகவலின் அடிப்படையில் முடிவெடுத்ததா கனடா? appeared first on Dinakaran.

Related Stories: